states

img

மோடிஜி உங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள்” -நேரலையில் தற்கொலைக்கு முயன்ற வியாபாரி கண்ணீர்

மோடி உங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள் என்று உத்தரபிரதேச வியாபாரி தற்கொலை யின் போது பேஸ்புக்கில் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
உத்தரபிரதேசத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று செருப்பு விற்பனை செய்யும்  வியாபாரியான ராஜீவ் தோமர் (வயது 40) வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டம் காரணமாக தற்கொலை செய்ய முயற்சித்தார். பேஸ்புக் நேரலையில் சென்று, வியாபாரத்தில்  பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக கூறி விஷத்தை அருந்தினார். இதை தடுக்க அவரது மனைவி முயன்றபோது, அவரை மீறி அவர் ஏதோ பொருட்களை வாயில் போட்டு விழுங்கும் காட்சி வீடியோவில் வெளியாகி உள்ளது. அவரது வாயில் இருந்து விஷப்பொருட்களை வெளியேற்ற அவரது மனைவி முயற்சி செய்தும், முடியாத நிலையில், 38 வயதான அவரது மனைவி பூனம் தோமரும் விஷம் அருந்தியுள்ளார்.
இதையடுத்து அவர்  “எனக்கு பேச சுதந்திரம் இருக்கிறது என்று நினைக்கிறேன். நான் பெற்ற கடனை அடைப்பேன். நான் இறந்தாலும் நான் செலுத்துவேன். ஆனால் இந்த வீடியோவை முடிந்தவரை அனைவரும் பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். நான் தேச விரோதி அல்ல, ஆனால் நான் நாட்டின் மீது நம்பிக்கை உள்ளது. ஆனால் மோடி அரசு அறிவித்துள்ள ஜிஎஸ்டி எனது வணிகத்தை  வெகுவாக பாதித்து, தன்னை இந்த நிலைக்கு தள்ளியுள்ளதாக பகிரங்கமாக குற்றம் சாட்டினார். நான் மோடியிடம் ஒன்று சொல்ல விரும்புகிறேன், நீங்கள் சிறு வியாபாரிகள் மற்றும் விவசாயிகளின் நலன் விரும்புபவர் அல்ல. உங்கள் கொள்கைகளை மாற்றிக் கொள்ளுங்கள்” என்று அவர் கண்ணீருடன் கூறுகிறார். இந்த வீடியோவை பார்த்தவர்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற காவல்துறையினர் தம்பதியினரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் அவரது மனைவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் தோமர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.